Friday, February 24, 2012

உன் உயிர் பிறந்ததென்று. . . .


முன்னிரவில் சிறு கால்கள் உதைப்பதை உணர்வேன்
பூரித்து நான் உன் முகம் பார்த்து தலை கோத
உறக்கம் கலையாமலே 'இன்னும் தூங்கலையா. .'
என்றே அனைத்து உறங்குவாய் என்னோடு  உன் பிள்ளையையும்
வலப்பக்கம் இருந்த தலை திரும்பி அடிப்பக்கம் தட்ட 
மின்னல் போலே ஒரு வலி பாயும் முதுகின் தண்டில் 
இடுப்பின் எலும்புகள் அகல
உண்மையிலேயே இடுப்பொடியும் வலி அறியும் நொடி பிறக்கும்
அணுக்கள் அத்தனையும் வலி உணரும்
மங்கிய என் கண்களில் உன் முகம் நிறையும்
எண்ணத்திலே நீ இருப்பாய் 
உடல் தளர்ந்தாலும் மனம் தளராது 
சுவாசித்திருப்பேன். . 
அறியாமல் களைத்தே போய்
உடல் உஷ்ணம் யாவும் இழக்கும் 
இருள் நிறைந்த வேறொரு உலகில் மெல்ல நான் பயணிப்பேன். .
முன்னொரு நாள் நீ கொடுத்த முத்தத்தின் வெப்பம் 
எனை சூழ முயற்சித்தே விழித்திடுவேன் . . .
உயிர் நழுவும் பொழுதில் 
உள்ளிழுத்த காற்று உள்ளுக்குள்ளே நிற்க 
யாவும் ஸ்தம்பிதிடும். . .
நொடி முடிந்த பின்னே அமைதி கொள்வேன்
உன் உயிர் பிறந்ததென்று. . . .

Sunday, February 5, 2012

Little somethings


It was a september evening. A week day. I was at my office with a client. It was all exciting when I started out. Office,work,an identity, respect in society, so and so. With time, I should say I got used to all these stuff. Its just that all days are same at office and at home as well. I checked time. It showed 4.30. I have to go home. My wife and kid will be waiting for me. There is an all important birthday party coming up,that we have to attend.I got a call from reception that someone is waiting up there to see me.I asked for the details and came to know that its 'an old friend' of mine.


From distance I could recognize what's waiting there for me at 10 feet distance. I made an eye to eye contact with her.If it had been some five plus four years ago, a harris jeyaraj melody or yuvan's beat would have made an apt background. But as of now its jus my lub-dub. "hiiii Sriram. . ." . she . Bright and clear with the same 1000 watts smile on her face. I said a soft 'hi'.I was indeed happy to see her after three long years. But why she had come all the way to visit me after all that happened.And my eyes said it all.


As always, she was good at reading my mind too. Clearing my doubts, she said "well. .its just a visit. . plain visit ram. . To know simply. .like. .how are you doing. . and how your life has been. . ." in a tone to cool down me. For a moment I felt so silly sbout me.Quickly recovering, I asked her if she would like to have a coffee. She obliged.


I have never seen even in my weirdest dream that I would have coffee with this girl with whom i fell in love with, who just needed a smile to blew me away , who driven me crazy and who left me broken and showed me how much I can love someone. ahhhh well. .  its happening. She is right infront me.


Her hairline has gone half a inch above where it used to be when we were together. She has used a darker shade of lipgloss and nailcolors.Under eyebags are visible. Damn different from the swathi I know. But still charming enough.Her eyes still carried that mystique. I could'n see them anymore and when I looked down, I saw her wedding ring. She was looking out through the window sipping the coffee.


I started it. "so how are you,swat? " . "oh very good,Ram. How is your family? your wife and you have a kid no. Heard it from some friend.Boy baby or girl baby?". I smiled and said "girl" . "Fantastic. For godsake don't tell me that her name is 'swathi' (laughs) ". Her joke didn't work well with me. Understanding that she leaned little front, punched me between my heart and shoulders and said,"Man. . I was joking""oh. .Is it madam. .ha ha. ." I shot back. I got this feeling as if we were in college. She speaks a lot now.But at that time it was me.She used to be a good listener.After sharing and spending lot of good and bad times with her, I asked her out. I actually gave her a  2003 diary(an old diary)full of my writings describing how I felt for her. That's how I proposed to her. Believe it or not, she didn't even gave back a word as reply. While returning the diary, she kissed me.kissed me right at my forehead and asked if she could keep the diary with her forever. 


"So how is your married life swat. . your hubby. . you both came on a trip to India or what?" It was damn difficult for me to ask this out.But over time I have learned to accept things. She got married two years after and a year later of our break up. "We are not together ram. We got separated.He has gone his ways and am minding mine.Marriage din work out." she stopped.


"But why swat. . you are an awesome girl. Why do u need to go through all this. . " ."I don't know ram.It has been a year now ". We should not have broken up.If I had been by her side, she would not have suffered.I should not have allowed this to happen. But most of the times life is not same as we think.At times it's so strange.When me and swat brought it to a level of telling parents, lot of issues surfaced up. She had a single mother and a very different brought up. Mine is a family of 10 people living in a part down of south TamilNadu.Things never really worked out.Her mom worked as a soft skills trainer.Her professional way of dressing,accent and manners was a bizarre at my home. When me and swat were trying to settle every issue, she got an opportunity to do masters in abroad.She planned to get married as soon as possible or least case get engaged with me formally and then flying out of India.I was not okay with her plans.When family was posing enough problems , we got some more in the form of career decisions. Finally we called 'it quits'. She married an NRI and went to US. That's it. I too got married a little later with a girl of my mom's choice.


"Flash back eh. ." she asked breaking the long silence. "kind of" I said. "Are you happy ram?". "what are you trying to ask swat. .""Just that ram. . are you happy?". "Am content".I took the safer side. "hah. . .Problem is that ram, we dreamt a lot when we were in the college but din stand up enough for even one of them. your aim was to be an entrepreneur. . a small, smart IT start up. .That's what you always talk about at those times.Now what are you doing in in a bank?? " .... ". That's true.I had no answers. Am not doing what I wanted to do.But am doing wat am destined to or that's how I take it to make things easier. "Not just you ram. I too had enough of it.We din marry because our parents din want us to. I went to do a foreign Masters beacause the peers were pressuring to do something to show that I belong to the cream group. And I married some stranger and presumed to live happily compromising every bit of me just because that's the theory. We had points to prove.And infact after all these years we have proved. But now I have this question Ram. why?? why do we need to prove this people.You know why am throwing up now. Because when am in my space, I feel left out.Emptiness is what all I have.Am not happy for what I have accomplished because I have not loved it.I could'n even figure out why my marriage fell out.Its not just about being happy. Its about a feeling of satisfaction that you are living your life"


"......................"I really had nothing to say. She rechecked herself through the process of life while I simply lost myself in the process.what can I advice her. Not to think more and complicate things. well its jus another way of saying get lost in the stream of things.


But she was in no mood to stop. "So I quit my job ram.Am settling down here.will do 'little somethings' to keep me busy and happy. I want to embrace everything that I feel I missed. That's why I visited you. well, I know I cannot embrace you(laughs)"


I admired her more than I did at our times.She should have read that too. I just wanted to see you,make sure that you are fine. That's it. She tried to smile.But a tear rolled down her cheek."It feels so good to be here.But its time I guess. . " she was signing off. I was reluctant to let her go.


She hugged me. Said good luck softly into my ears and left. She din even turn back.I was standing there looking at her vanishing out by the door. There goes the life I dreamt of. . . . . .


" enna sriram sir. . verum road eh morachu pathutu nikkureenga. innum kelambala veetukku. . " office assistant selvam. oh my god its already six!!!! hiyo birthday party!


"hello sorry ma. . call eh kavanikkala. . vanthutey irukken ma. nee ready ah iru. Ten mins la anga irupen. ."    

Friday, October 14, 2011

விரும்பினும் விரும்பாவிடினும். . .

வெறித்துப் பார்க்கிற ஜன்னல் வழி
கசிந்தே கரைகிறது பொழுது. .
தனியாய் சாலை கடக்கயிலே
தெரிந்த குரல் விளிப்பதாய் நினைவு. . .
பள்ளிக்கால தோழி ஒருத்தி தொலைபேசியில் அழைப்பதாய்
மறந்து போன பழங்கதைகள் சில பேசுவதாய்
அடிக்கடி வருகிறது குழம்பிய கனவு. .
முகம் பார்க்காத உரையாடல்களின் வழி
உயிர் பிழைக்கின்றன உறவுகள். .
தீராத தேடலில் தொலைவது யாதாயினும்
தொடர்ந்தே நகர்கிறது வாழ்க்கை
விரும்பினும் விரும்பாவிடினும். . .

Saturday, March 13, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் -தொடர் பதிவு


ரொம்ப  நன்றி பிரபு.என்னையும் ஒரு வலை பதிவராக மதித்து அழைத்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.உண்மையாகவே உங்கள் அழைப்பு ஒரு இனிய அதிர்ச்சி
எனக்கு பிடித்த பத்து பெண்கள்

(வரிசைப்படி எல்லாம் போடவில்லை.வரிசைபடுத்தவும் தெரியவில்லை.)
 
1 .பார்க்கா தத்
தினம் அனைவரும் பார்க்கும் முகம் தான்.NDTV யின் prime time talk show "the buck stops here" ஐ  நடத்துபவர்.NDTV யின் எடிட்டர்களில் ஒருவர்.சாதாரண செய்தியைக்  கூட sensation ஆக்க முயல்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரிடம் கேட்க வேண்டியவைகளை நச்சென்று கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.முகத்தில் ஒளிரும் தன்னம்பிக்கையும்,தேவையான நேரத்தில் உதிர்க்கும் புன்னகையும்,...at any time she is an idol for modern age Indian woman.

2.அருந்ததி  ராய்
புக்கர்  பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர்.சமூக ஆர்வலர்.இயல்பாகவே முற்போக்கு சிந்தனை கொண்டவர்.சமீபத்தில் தமிழகம் வந்த இவர்,பின்தங்கிய குறவர் இன பெண்களை பார்த்து,இவர்களின் dressing sense தன்னை போலவே இருக்கிறது என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்.நமது சமூகத்தின் வளர்ச்சியில் இவரை போன்ற intellectuals சின் தாக்கம்  அதிகம் என்றே நினைக்கிறேன். 


3.சான்ரா புல்லாக்
வழக்கமான hollywood நடிகை தான்.உண்மையாக இவர் நடித்த miss.congeniality என்கிற படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.அதில் இருந்தே அவர் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் பார்ப்பேன்.பொதுவாக அழகுக்கு சொல்லபடுகிற இலக்கணங்களுக்குள் இவர் வர மாட்டார் என்றாலும் முகத்திலும் body language லும் தெரிகிற தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.சமீபத்தில் ஆஸ்கார் வென்றிருக்கிறார். 

4 பிரியங்கா சோப்ரா
சான்ரா புல்லாக் போலவே தான் இவரும்.ஆனால் இவர் கொள்ளை அழகு.இவரது நடிப்பை விட இவரது attitude மற்றும் சமூக சேவைகள் மிகவும் பிடிக்கும்.

5 செல்லம்மா
பாரதியின் செல்லம்மாவே தான்.கொள்கை பிடிப்புடன் இருப்பவர்களோடு எதார்த்தமான மனநிலையோடு இருப்பவர்கள் இருப்பது மிகவும் கடினம்.அத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் வீட்டில் சமைக்க வைத்து இருந்த அரிசியை எடுத்து 'காக்கை குருவி எங்கள சாதி' என பறவைகளுக்கு வீசி எறிந்த பாரதியோடு எப்படி குடும்பம் நடத்தி இருப்பார் இந்த பெண்மணி.என்னை கவர்ந்த பெண்மணிகளில் இவரும்ஒருவர். 

6.ஊர்மிளை
அதிகம் அறியப்படாத ஒரு காவிய பாத்திரம்.லக்ஷ்மணனின் மனைவி.ராமரோடு வனத்திற்கு  சென்ற சீதையை பற்றி இன்றும் பேசி வருகிறோம். அண்ணனுக்கு சேவை செய்த லக்ஷ்மணனின் நினைவாகவே வாழ்ந்தவள் ஊர்மிளை.மகாபாரதத்தில் கர்ணனுக்கு இழைக்கப் பட்டது போல் இவளுக்கு இழைக்குப்பட்டதும் அநீதி என்றே தோன்றுகிறது.காவியங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்.

7.செய்னா நேவல்
டென்னிசில் டாப் 30 குள் வந்த சானியாவுக்கு கிடைத்த அளவுக்கு  புகழ் 'சூப்பர் சீரீஸ்' வென்ற  செய்னாவுக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.glamour quotient கம்மி என்பதாலா என்று தெரியவில்லை. 

8 .கிம் கிளிஸ்டர்ஸ்
திருமணத்துக்கு பிறகு பெண்கள் வேலைக்கு செல்லலாமா சென்றாலும்,career இல் பெரிய உச்சங்களை தொட முடியுமா  என்ற விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கையில்,அசால்டாக ஒரு கிராண்ட் ஸ்லாமைத் தூக்கி இருக்கிறார் இந்த இளம்தாய். 

9 .ராதா
கிருஷ்ணரின்  ராதா இல்லை. எனது பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியை..ஆசிரியப் பணியை வெறும் பணியாக செய்யாமல் மனம் முழுவதையும் ஈடுபடுத்தி செய்தவர்.இவர் கொடுத்த motivation speeches இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு சத்தியமாய் இவரை சென்று சந்திக்க வேண்டும்  என்று நினைத்திருந்தேன்.ஆனால் அவர் இப்பொழுது இல்லை.நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது.

10 சோனி மோகனன்
one of my best friends.என் தோழிகள் அனைவரையுமே எனக்கு பிடிக்கும்,அனைவரையுமே நான் நேசிக்கிறேன் என்றாலும் இவரிடம் தோழி என்பதையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எதையும் எதிர்நோக்குகின்ற தைரியம் ,சுய நலமின்மை,விட்டுக் கொடுத்து போவது, கஷ்டங்கள் இருக்கின்ற போதிலும் கலக்கமில்லாமல்  சிரிப்பது என ஏராளம்.hostel நாட்களில் ஒவ்வொரு தேர்விற்கு தயார் செய்யும்  போதும் என்னை அதிகாலை எழுப்புவது இவர் தான்.அதிகாலை 3 மணிக்கு எழுப்ப சொன்னால் கூட அலாரம் வைத்து எழுந்து வந்து நான்கு ரூம்கள் தள்ளி இருக்கும் என் ரூமிற்கு வந்து என்னை எழுப்பி விட்டு மீண்டும் சென்று உறங்குவாள்.A girl who pays immense value to love.let me take this as one more chance to tel her this.sony,I love you!!
எனக்கு பின்தொடர நான் அழைக்க விரும்புவது

Wednesday, March 10, 2010

அலைகள் விளையாடும் கடலில்
கால் நனைத்து விளையாடினோம்...
சிறு வீடு கட்டினோம்...
அலை வந்து அடித்துச் சென்ற போதும்
குதூகலத்துடனே திரும்பினோம்...
கடந்து போன காலங்களில்
கண்ணீர் இருப்பினும் அதில் கணம் இல்லை...
வலிகள் வந்து சென்றாலும் வடுக்கள் இல்லை...
'அன்பே கடவுள்' அர்த்தம் புரியாவிடினும்
அன்பு செய்து வாழ்ந்திருந்தோம்...
இன்று போனால் நாளை வருமென்றிருந்தோம்...
போனால் வராதது வாழ்க்கை என்று புரிந்து போன நாளில்
முறிந்து போனது இடிந்தாலும் கட்டி விளையாடும் குதூகலம்...

Saturday, February 20, 2010

காளீசு-2

          மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மாலை எப்போது வரும் என்று காத்து இருந்தாள் காளீசு.பள்ளிக்கூடம் விட்டு நேராக கிழவியின் வீட்டுக்கு சென்று விட்டாள். "என்னடி இது.. ஒரு நாளும் இல்லாத அதிசயமா இம்புட்டு வேமா வந்துட...மழை கொட்ட போவுது.சரி போ... பொய் வேலைய பாரு..."கிழவிக்கு காரணம் ஒன்றும் புரியவில்லை. எப்பொழுதும் 15 குடம் தண்ணீர் என்றால் இன்று முப்பது குடம் எடுத்து ஊற்றினாள். போய்த் திரும்பும் வழியில் உள்ள முற்றத்தில் இருக்கும் எரோபிலேனை காணலாம் என்று.முற்றத்தை சுற்றி உள்ள பகுதிகளைக் கழுவி விட்டாள்."இன்னிக்கு என்ன ஆச்சு இவளுக்கு.." கிழவி ஆச்சர்யப்பட்டு போனாள். கலீசு ஏரோபிளேனில் மட்டுமே தன் கவனத்தை வைத்து இருந்தாள்.இன்னும் இன்னும் அவளை அது வசீகரித்துக் கொண்டே இருந்தது.இப்படியே தான் அவளுக்கு திருவிழா நடந்த ஒரு வாரமும் கழிந்தது.
         வழக்கம் போல எரோபிலேனைப் பார்பதற்காக பள்ளியில் இருந்து நேராக கிழவி வீட்டுக்கு வந்த காலீசுக்கு அன்று ஏமாற்றமே மிஞ்சியது.அனைவரும் புறப்பட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.உடன் எரோபிலேனும்.. அழுகை முட்டிக் கொண்டு வந்தது காளீசுக்கு...ஏமாற்றங்கள் புதிதில்லை என்பதால் அடக்கிக் கொண்டாள். "அடுத்து எப்ப பெரியாத்தா அல்லாரும் வருவாக...".முத்துமாரியம்மன் கோயில் கொடைக்கு வரச் சொல்லியிருக்கேன்.வர்றாகளோ என்னவோ..." அவள் அவள் கஷ்டத்தில் பெருமூச்சு விட்டாள். எரோபிலேனோடு காளீசின் குதூகலமும் சென்று விட்டது. தினம் தூங்குவதற்கு முன் எரோபிலேனை நினைத்துக் கொண்டு தான் தூங்குவாள்.அடுத்த திருவிழாவுக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.அடுத்து பல திருவிழாக்கள் வந்து சென்றன.சிலவற்றிற்கு அவர்கள் வரவில்லை. சிலவற்றிற்கு அவர்கள் வந்திருந்தாலும் ஏரோபிளேன் வரவில்லை.
         பொறுத்துப் பார்த்த காளீசு தானே ஒரு ஏரோபிளேன் பொம்மை வாங்கி விடுவது என முடிவு செய்து அவள் அம்மாவிடம் சொன்னாள். இவள் கேட்க கூடாத ஏதோ ஒன்றை கேட்டு விட்டார் போல் ஆரம்பித்து விட்டாள் அவள் அம்மா."வெலக்கமாத்துக்கட்டைக்கு பட்டு குஞ்சம் கேக்குதோ... ஏண்டீ தின்கிற சோத்துக்கே நாய் படாத பாடு படறோம்.இதுல ஏ.....ரோபிலேனுக்கு எங்க போறது..""இல்லம்மா எனக்கு ஒரே ஒரு பொம்ம மட்டும் வாங்கிக் குடு..."வேளையில் இருந்து திரும்பிய அலுப்பும் இயலாமையும் ஒன்று சேர்ந்து கொண்டது அம்மாவுக்கு."கழுத போன வருசம் உக்காந்துருச்சு ..இத  எப்டி கட்டி குடுக்ரதுன்னு தெரியாம  ராவெல்லாம் எனக்கு தூக்கம் புடிக்க மாட்டேங்குது.இது என்னடான்னா நேத்து பொறந்த புள்ளையாட்டம் பொம்ம வேணுமாம்.. நீ என்ன ராசா வீட்டு புள்ளயா..."மீண்டும் காளீசு பிடிவாதம் பிடிக்க கோபம் முற்றி அவளை துவைத்து எடுத்து விட்டாள் அம்மா.என்றாலும் அம்மாவுக்கு காளீசு மீது பாசம் அதிகம்.அடுத்த நாள் அம்மன்பட்டி கோவில் திருவிழாவில், தம்பிக்கும் தங்கைக்கும் ரெண்டு ரூபாய் குடுத்து ராடினத்திற்கு அனுப்பி விட்டு இவளை மட்டும் தனியாக எழுத்து கொண்டு பொய் ஒரு பொம்மை கடையில்  நிறுத்தி அடித்த தழும்பை தடவிக் கொண்டே சொன்னாள்.."ஏரோபிளேன் பொம்ம வாங்கிக்க புள்ள..."பட்டென்று திரும்பி எரோபிலேனைத் தேட ஆரம்பித்தாள் காளீசு.இந்த கடையில் இருந்த ஏரோபிளேன் ரொம்ப சின்னதாய்  இருந்தது.லைட்டுகள் இல்லை.மூக்கு மொழுக்கென்று இருந்தது."அண்ணே லைட்டு எரியிற ஏரோபிளேன் இருக்கா.."இவளை மேலும் கீழும் பார்த்த அவன் "அங்க இருக்கிறது தான் பொம்ம... வந்குரதுனா வாங்கு.. இல்லனா வச்சுட்டு நட.. சொம்மா கடைய மறைச்சுக்கிட்ட நிக்காதா..." பின் அவனோடு அம்மா சண்டை போட்டு வீடு வந்து சேர அன்றைய பொழுது போனது என்றாலும் காளீசுக்கு ஏரோபிளேன் கிடைக்கவில்லை.
          அன்றிலிருந்து காளீசு ஏரோபிளேன் வாக பணம் சேர்க்க ஆரம்பித்தாள்.காளீசுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டாள் அம்மா.மாமன் முருகன் தான் மாப்பிள்ளை.டவுனில் வேலை பார்க்கிறான்."காளீசு ஏரோபிளேன் எரோபிலேன்னு கடந்த.. டவுன்ல நெசமான எரோபிலேனே இருக்கும்.பாக்கலாம் புள்ள. நீ அதிஷ்டக்காரிதான்..."இது காளீசின் தங்கை.வெகு நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் ஏரோபிளேனில் பள்ளிக் கூடம் போவது போல கனவு வந்தது காளீசுக்கு.இந்த முறை உடன் முருகனும் வந்தான்.பரிசம் போட்டதில் இருந்து வேலைக்கு  போவதை நிறுத்தி விட்டாள் காளீசு.தையில கல்யாணம்.முருகனோ ஞாயிற்றுக்கிழமைகள் எல்லாம் காளீசின் வீட்டுக்கு வந்து அவளையே சுற்றி சுற்றி வந்தான்.ஒரு முறை கேட்டான்."புள்ள...அடுத்தவாட்டி உனக்கு டவுன்ல இருந்து என்ன வாங்கியார..."
"எதுனாச்சும்  வாங்கியா மாமா..." "ஏய்..உனக்கு என்ன புடிக்கும் சொல்லு புள்ள..." பிடிக்கும் இந்த வார்த்தை கேட்ட உடனே காளீசுக்கு ஏரோபிளேன் தான் ஞாபகத்துக்கு வந்தது.குதூகலம் காட்டி கேட்டால் "மாமா எனக்கு ஏரோபிளேன் வாங்கியாரியா? ..."சப்பென்று இருந்தது முருகனுக்கு."ஏம்புள்ள மைசூர் மகாராசவையா கட்ட போற.. ஏரோபிளேன் கேக்குற..எதுனா சீல, வளவி னு கேப்பியா... ஏரோபிளேன் வேணுமாம்ல..." 
"என்ன மாமா.. ஏரோபிளேன் பொம்ம தான் வேணும்னு கேட்டேன் ..." "பொம்மையா... அதெல்லாம் நமக்கு பாப்பா பொறந்த உடனே வாங்கித் தர்றேன்.." என்று சொல்லி குறும்பாய்ச் சிரித்தான்.
         அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு டவுனுக்கு வந்து இரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டது.எரோபிலேனைக் கிட்டத் தட்ட மறந்தே பொய் விட்டாள் காளீசு.எப்போதாவது டிவியில் ஏரோப்ளேன் பார்த்ததால் பழைய நினைவுகள் வரும்.ஒரு ஏக்கம் படரும்.அவ்வளவுதான்.அன்று அவளின் சின்னக் குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி  போட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள்.வழி மாறி வேறொரு இடத்தில் இரங்கி விட்டாள்.வீட்டைத் தேடி நடந்து வந்து கொண்டிருக்கையில் அவள் குழந்தை திடீரென அழுதது.மழலையில் "அம்மா...மா..பொம்ம பொம்ம...' என்று கை காட்டியது.கை காட்டிய திசையில் ஒரு அழக்கான பொம்மைக் கடை.அருகில் சென்று பார்த்த காளீசுக்கு கைகள் சில்லிட்டு கண்கள் கலங்கி விட்டன.அவள் சின்ன வயதில் பார்த்த அதே ஏரோபிளேன் பொம்மை.இந்த பொம்மை அதை விடக் கூட பெரியதாய் பளபளப்பாய் இருந்தது.அருகில் சென்று லேசாய் அதன் மூக்கைத் தொட்டு பார்த்தாள்.புல்லரித்தது."இந்த பொம்மை எல்லாம் எம்புட்டு?" 400 ரூவா என்றான் கடைக்காரன்.தன் பர்சைத் திறந்து எண்ணிப் பார்த்தாள்.மடித்து மடித்து வைத்த பழைய நோட்டுக்கள் எல்லாம் சேர்ந்து 600 சொச்சம் இருந்தது.அவள் குழந்தை அதற்குள் "மா.. பாப்பா பொம்ம..பாப்பா பாபா..." என்று ஏரோபிளேன் அருகில் இருந்த ஒரு பாப்பா பொம்மையை நோக்கி இவள் கைகளில் இருந்து தாவ முயன்று கொண்டிருந்தது. தன் பர்சில் இருந்து நானூறு ரூபாயை எண்ணிக் கடைக்காரனிடம் கொடுத்து விட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்தாள் காளீசு ,பாப்பா பொம்மையோடு...


-முற்றும்

Thursday, February 18, 2010

காளீசு!!

"இவ்ளோ நேரமாடீ? எப்போ பள்ளிக்கூடம் விட்டுச்சு?இப்ப தான் வர்றவ..." அலுத்துக் கொண்டாள் கிழவி.வீட்டுக்கு போயிட்டு வந்தேன் பெரியாத்தா  என்றாள் காளீசு.என்னத்தயாவது ஒரு காரணம் சொல்லு.சரி சரி தண்ணி நிக்கிறதுக்குள்ள எடுத்து வந்து ஊத்து.நாளைக்கு ஊர்ல இருந்து ஆளுக வர்றாக..." "திருவிழாவுக்கா  பெரியாத்தா..."  என்றாள் காளீசு."ஆமாமா.."ஏற்கனவே தாமசமா வந்துரக்க.. விடு விடுன்னு போய்  எல்லா தொட்டியையும் நொப்பி வை.நாளைக்கு தேவைப்படும்..." குடத்தை எடுத்துக் கொண்டு தெருமுனையில் இருக்கும் குழாயடிக்கு விரைந்தாள் காளீசு .
படிப்பது எட்டாவது.அரசு பள்ளியில்.இவளுக்கு பிறகு 2  தங்கைகள்.அப்பா இல்லை.அம்மா வயல் வேலைக்கு செல்வாள்.இவள் மாலை நேரத்தில் கிழவி வீட்டிற்கு வந்து அவள் சொல்கிற அத்தனை வேலைகளையும் செய்வாள்.மாதம் 200 ரூபாய் சம்பளம். கிழவியின் வீடு தான் நகரத்தின் நிழல் கூட பரவாத அந்த கிராமத்திலேயே  பெரியது.அவள் தான் வசதியானவளும் கூட.பிள்ளைகள் எல்லாரும் படித்து நகரத்தில் செட்டில் ஆகி விட்டனர்.பண்டிகைகள் ,பிற நல்ல நாட்களுக்கு மட்டுமே குடும்பத்தோடு கிழவியின் வீட்டிற்கு வருவார்கள். 
          அடுத்த நாள் காளீசு  வேலைக்கு வரும் போது கிழவியின் வீடு கலகலப்பாய் இருந்தது.ஊரில் இருந்து அனைவரும் வந்து விட்டனர்.பேரபிள்ளைகள் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.ஒரு பக்க பின்னல் ரிப்பன்  அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. தன் அழுக்கு பாவாடையைத் தூக்கி சொருகிக் கொண்டு உடலை வளைத்து அந்த பெரிய பானையை இடுப்பில் வைத்து கொண்டு வீட்டினுள் வந்தாள்.அங்கே கிழவியின் பேரபிள்ளைகள் வித விதமான பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.குரங்கு பொம்மை,கார் பொம்மை,கிளி பொம்மை என பல பொம்மைகள் இறைந்து கிடந்தன.காலீசின் கண்ணில் பட்டது ஒரு பெரிய பொம்மை.வெள்ளை நிறத்தில் இருந்தது.கூர்மையான மூக்குடன் இரண்டு கைகளையும் அகல விரித்தது போல இரண்டு இ றக்கைகளோடு  இருந்தது.கலர் கலராக லைட்டுகள் எரிந்தன.வினோதமான ஒலி வந்தது.வினோத் கையில் ஏதோ ஒன்றை வைத்து அழுத்திக் கொண்டிருக்க அவன் காட்டிய திசைகளில் எல்லாம் நகர்ந்தது. காளீசு அந்த பொம்மையை விநோதமாக பார்த்துக் கொண்டு நின்றாள்."ஏய் காளீசு.. தண்ணி கொடத்தோட எம்புட்டு நேரம் நிப்ப.. போய் ஊத்திட்டு அடுத்த குடத்த மோந்துட்டு வாடி..." கிழவியின் குரல் கேட்கவும் தண்ணியை ஊற்ற அடுப்பங்கரைக்கு விரைந்தாள்.திரும்பி காலிக் குடத்துடன் மீண்டும் முற்றத்திற்கு வந்தாள்.அவளால் இப்போது ஆவலை அடக்க முடியவில்லை. குடத்தைக் கீழே வைத்து விட்டு  ஒரு தூணை கட்டி கொண்டு அங்கேய நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
          அந்த பொம்மையை பார்க்க பார்க்க அவளுக்கு குதூகலம் பொங்கியது. மாறி மாறி எறிந்த கலர் லைட்டுகள் அவளை பரவசப்படுத்தின. மெல்ல நடந்து வினோத்தின் பக்கம் போய் நின்று கொண்டாள்.
மெதுவாய்... "அண்ணே இந்த பொம்ம பேரு என்ன.." எனறாள்...  வினோத்தின் காதில் அதில் விழவே இல்லை."ஐயோ அவன் பிப்த் தான் படிக்கிறான்.அவன போய் அண்ணன்னு கூப்பிடற..." சிரித்தாள் தீபா.அவளை பார்த்த காளீசு   லேசாய் சிரித்து விட்டு மீண்டும் கேட்டாள் "அது என்ன பொம்ம..." "அதுவா அது ஏரோபிளேன் பொம்ம..." "எரோபிலேனா? அப்பிடினா...." தீபாவுக்கு சிரிப்பு வந்தது."ஏரோபிளேன் தெரியாதா... இது வானத்துல பறக்கும்.பஸ்சு ரோட்ல போகுதுல்ல அது மாதிரி இது வானத்துல போகும்.." கண்கள் அகல விரிந்து விட்டது காளீசுககு."வானத்துலையா...? அம்மாடி....பயமா இருக்காதா...." காளீசின் ஆச்சர்யம் தீபாவுக்கு உற்சாகம் தந்தது.
"ஆமா... வனத்துலதான்.என்ன பயம் .. பழகிட்ட பயம் தெரியாது.நாங்கல்லாம் டெய்லி ஸ்கூலுக்கு எரோபிலேன்ல தான் போவோம்...." "தெனமுமா...?"அசந்து போய் விட்டாள் காளீசு .அந்த பொம்மை அவளை மேலும் வசீகரித்தது.
          அன்று மாலை எரோபிலேனை வேடிக்கை பார்த்து அதனால் கிழவியிடம் திட்டு வாங்கி அதன் பின் பிற வேலைகள் எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்ப இரவு எட்டு ஆகி விட்டது.அம்மாவும் வீடு திரும்பி இருந்தால்.வீட்டில் அனைவரும் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர்.பொதுவாக கிராமங்களில் பொழுது சாய்ந்த உடனே ஊர் அடங்கி விடும்.எட்டு மணி என்பதே அதிகம்.அம்மாவும் வேலையில் அலுத்து சலித்து போய் ஒரு ஓரத்தில் படுத்திருந்தாள். "ஏன்னா புள்ள... இன்னைக்கு இம்புட்டு நேரம் ஆகி போச்சு... சரி சோற போட்டு சாப்டுட்டு படு.உனக்கு வெஞ்சனம் எடுத்து வச்சிருக்கேன்.அதையும் பாத்து எடுத்து சாப்பிடு."சாப்பிட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள் காளீசு .
        காளீசுக்கு தூக்கமே வரவில்லை.அந்த ஏரோபிளேன் பொம்மை நினைவாகவே இருந்தது.வானத்தில் பறக்குமாம்.பிரமிப்பு குறையவே இல்லை."அம்மா...இன்னிக்கு பெரியாத்தா வீட்ல பிள்ளைக வந்துருக்காகள்ள அவுக நெறைய பொம்ம வச்சு இருக்கன்கம்மா... அதுல ஏரோபிளேன் நு ஒரு பொம்ம மா.. அது வானத்துல பறக்குமாம். நெசத்துல ரொம்ப ரொம்ப பெருசா இருக்குமாம்...." இவள் பேசிக் கொண்டே இருந்தால்.அவள் அம்மா தூங்கிப் போய் வெகு நேரம் கழித்தே பார்த்தாள் காளீசு  ."சே... தூங்கிருச்சு..." இவள் நினைவுகள் அந்த ஏரோபிளேன்  பொம்மையை சுற்றியே இருந்தன. எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை .கனவில் நிறைய எரோபிலேன்கள் வந்தன.பச்சை மஞ்சள் நீளம் என வித விதமான லைட்டுகள் எரிந்தன.மஞ்சள் நிற ஏரோபிளேன் ஒன்றில் காளீசு  தன் பள்ளிக்கு சென்றாள்.அவள் வீட்டுக்குள் குட்டி குட்டி ஏறோபிலேன்கள் பறந்தன.

-தொடரும் (அடுத்த பகுதியில் முடியும்) :)

Friday, February 12, 2010

என் காதல் கவிதை!!

ஒரு முறையேனும்
உன் சோகத்தை  பகிர்வாய் என்றே
ஒவ்வொருமுறை நீ கலங்கும் போதும்  கேட்கிறேன்
"என்னவாயிற்று?" என்று
நீயோ முகம் திருப்பி
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டு
"எல்லாம் நலம்"
என கண்கள் மின்ன புன்னகைக்கிறாய்


உன்னோடு சேர்ந்து
பார்க்கின்ற நிலா அழகு என்பதாலேயே  சொல்கிறேன்
 "இன்றைய நிலா ரம்மியம் " என்று                                                   
நீயோ "உன்னை மட்டுமே ரசிக்கிறேன் நான்
என்னைத் தவிர எல்லாவற்றையும் ரசிக்கிறாய் நீ" என
சின்னக் கோபம் பூக்கிறாய்

பசும்புல் வெளிகளில் விழும்
மழை சாரல்களும் நீயும் வேண்டும் என்கிறேன் நான்
அக்கறையாய் எனக்கென்று ஒரு குடையோடு
உடன் வருகிறாய் நீ

உன் பிறந்த நாளுக்கான பரிசினை
ரகசியமாய் யோசிக்கிறேன் நான்
நீயோ அப்பட்டமாய் கேட்டு விடுகிறாய்
இந்த பிறந்த நாளிற்கு என்ன வேண்டும் என்று

இப்படி
என் சின்ன சின்ன கவிதைகளை
நீ சிதறடிக்கிற போதும்
வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும்
அப்பாற்பட்டது உன் நேசம்
என்பதால்
இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது
என் காதல் கவிதை!!

Monday, February 8, 2010

கனவுகள்!!

விடிந்தும் முடிந்தும்
கடந்து போகின்ற
நாட்களில்
செலவாகின்றன
கனவுகள்!!

Friday, January 8, 2010

நண்பர்கள்!!

வண்ண மலர்களின் வாசமும்
பறவைகளின் நாதமும்
வீசுகின்றன இளம் தென்றலும்
காலை வெளிச்சத்தில்  கரைந்து கொண்டிருக்கும்
சோடியம் விளக்குகளும் ...
உறக்கத்தையும் கனவுகளையும்
போர்வையோடு மடித்து வைக்கின்றன மனிதர்களும்
காலைக்கே உள்ள ஸ்பரிசமும்
அழகாக்குகின்றன நாளின் தொடக்கத்தை...
அப்படியே,
மென்மையான அன்பும் 
உரிமையோடு பாசமும்
விளக்க இயலாத நேசமும்
உணர்வோடு பின்னிபோகின்றன நெருக்கமும்
நடுக்கத்தில் கைக்குள் நுழைகின்றன ஐவிரல்களும்
'இதெல்லாம் ஒரு மேட்டர் னு பீல் பண்ற பாத்தியா?"
ஆறுதல் வார்த்தைகளும்
குறும்புச் சிரிப்புகளும்
கேலிப் பேச்சுகளும்.....
கடவுளின் வரங்களாய்
வாழ்வை அழகாக்கி செல்கிறார்கள்
நண்பர்கள்!!

Wednesday, January 6, 2010

மே மாதம்(6)

......-6...  ராகுல் வந்து விட்டு சென்று 5 நாட்கள் ஆகிறது.அதன் பின் எந்த தகவலும் அவனிடத்தில் இருந்து இல்லை.மலர் மனதில் புயல் வீசிக் கொண்டிருந்தது. முன்பு போல் தன மனதை ஒரு முடிவு நோக்கி அவள் செலுத்தவில்லை...நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மனதில் ஓடி கொண்டிருந்தன.திடீரென பெங்களூரில் கிடைத்த கார்த்திக்கின் நட்பு...எப்பொழுதும் இவளை அழ வைத்து கொண்டிருக்கும் ராகுல்....தானாய் ஒரு முடிவுக்கு அவள் மனம் சென்றது.ராகுலைப் பார்க்க வேண்டும்.அவன் கண் பார்க்கும் நேரத்தில் மனதில் தோன்றுகிற அத்தனை கேள்விகளையும் அவனிடத்திலே கேட்டு விட வேண்டும்.வேக வேகமாக கிளம்பினாள்.போகிற வழியில் அவனை போனில் அழைத்தால்."எங்க இருக்க..?""என் flat  பக்கத்துல இருக்ற பார்க் ல இருக்கேன். என்ன  விஷயம் மலர்....?".."உன்ன பாக்கணும்.." இது மலர்."சரி ஒரு 1 அவர் ல வரேன் ..." என்றான் அவன்.இதை கேட்கும் பொழுதே மலர் அவன் வீட்டை நெருங்கி இருந்தாள்.அடுத்த 5 நிமிடத்தில் அவன் சொன்ன பார்க்கை அடைந்து அங்கு இருந்த அவனயும் பார்த்து விட்டாள்.
          அங்கு அவன் மாத்திரம் இல்லை.அவனோடு ப்ரீத்தியும் இருந்தாள்.இவளை பார்த்த மாத்திரத்தில் அவன் வேக வேகமாய் பேச தொடங்கினான்."மலர்..அன்னிக்கு ஒரு சண்ட..ரொம்ப வெக்ஸ் ஆய்ட்டேன்..அதான் உன் வீட்டுக்கு வந்து ஏதேதோ பேசிட்டேன்...ஒன்னும் மனசுல வச்சுக்காத.உணர்ச்சிவசப்பட்டு பேசினது எல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது...." அவன் கண்களில் மின்னிய குற்ற உணர்ச்சியை அவள் பார்த்தாள்.அவள் சமாதானம் அடைய வில்லை என்பது ராகுலுக்கு தெரிந்தது.விடு விடுவென்று அவளை 4 அடி தள்ளி அழைத்து சென்றான்."மலர் எப்பவோ orkut ல பேசினது எதுக்கும் இப்போ அர்த்தம் இல்ல..அதெல்லாம் சும்மா...ஆனாலும்...ஐயோ உனக்கு எப்படி புரிய வைக்கிறது...உன்னோட இந்த கண்களை எப்பவுமே என்னால மறக்க முடியாது....ஆனா..." விளையாட்டுகளில் ஒரு வீரர் காயம் பட்டால் இன்னொருவரை substitue ஆக வைத்திருப்பது போல..இவனது காதல் ஆட்டத்தில் நான்..மலருக்கு நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.பாதியில் அவனை நிறுத்திய அவள்தன் மனதில் பட்டதைக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாள் கார்த்திக்கின் வீட்டிற்கு.
        நடந்தவை அனைத்தையும் நிதானமாய் கேட்ட அவன்..நீங்க என்ன மலர் பதில் சொன்னிங்க என்றான்...
"போதும்...உன் வாழ்க்கைல எந்த மனித உணர்வுகளுக்கும் அர்த்தம் இல்ல...என் மனசுல இருந்து நீ போய் ரொம்ப நாள் ஆகுது.இன்னொருமுறை எதுக்காகவும் என்கிட்டே வராதே ..." ."எப்பிடி மலர் சொன்னீங்க.. இதை சொல்ல முடியாம தான இத்தன நாளா தவிச்சீங்க..".."ஆமா கார்த்திக்... என்னால எந்த தயக்கமும் இல்லாம சொல்ல முடிஞ்சது.. ஏன்னா உங்க அன்பை நான் தெளிவா புரிஞ்சுகிட்டதால...என்னோட தயக்கத்தால இது வரைக்கும் என் வாழ்க்கைல எத்தனையோ இழந்து இருக்கேன்.நான் விரும்பின படிப்பு..வாழ்க்கைனு எவ்வளவோ...ஆனா இன்னிக்கு என் தயக்கத்த உதறி தள்ளிட்டு கேக்றேன்...உணர்ச்சி வசபடல.. தெளிவா இருக்கேன்..உங்க அம்மாவோட திருச்சிக்கு வருவீங்களா...என்னை உங்க கூட மறுபடியும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்களா... உங்க கைய கோர்த்துகிட்டு மிச்சமிருக்கிற பாதைய கடக்கணும்ஆசைபடறேன் ..." அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.அவள் வாழ்க்கையை நிறைத்திருந்த ஏமாற்றம் இரு துளி கண்ணீராக கண்களில் இருந்து கன்னத்தில் வழிய,தன் முதல் விரலால் அதைத் துடைத்து எறிந்தான் கார்த்திக்.
          "எப்பிடி இத்தன நாள் போச்சுனே தெரியல மா... " ராமின் அம்மாவிடம் சொன்னாள் ஸ்வாஷிக்கா.."ஆமாம்மா...பேசாம நீ எங்க கூடவே இருந்துடு.... " சூசகமாய்..சுலபமாய் தன் மனதை சொல்லி விட்டாள் ராமின் தாய்.இங்கேயே இருந்து விட அவளுக்கும் ஆசை தான்.ஆனால் எப்படி இருக்க முடியும்.விவாகரத்து பெற்றவள் இவள்.ராமின் குடும்பச் சூழலோ முற்றிலும் வேறு பட்டது.ராமிற்கும் இந்த எண்ணம் தான்.அனால் எப்படி ஸ்வாஷிக்காவிடம் கேட்பது.அவள் வசதியானவள்.அவளது வாழ்க்கை முறை வேறு.என்னை மட்டும்மில்லை என் குடும்பத்தையும் அவள் ஏற்க வேண்டும்.பெரிய பாரத்தை ஏற்றுக் கொள் என்று எப்படி அவளிடம் கேட்பது.இப்படி தயக்கத்திலே நாட்கள் கழிய அவள் கிளம்புகின்ற நாளும் வந்து விட்டது.
          மூட்டை முடிச்சுகளுடன் அவளை பார்த்த ராமிற்கு திக்கென்று இருந்தது.அவளுக்கோ உயிரை இங்கு விட்டு செல்வது போல் இருந்தது.அவள் இழக்க போவது ராமை மட்டும் அல்ல.ஒரு அழகிய குடும்பத்தை.வெளியில்  டாக்ஸி வந்து நிற்க...இவள் பையை தூக்கிய உடன் ராமிற்கு யாரோ விருட்டேன்று இதயத்தை பிடிங்கியது போலிருந்தது.பட்டென்று ,"நீ போய் தான் ஆகணுமா ஸ்வாஷிகா... இங்க... என்கூட ..எங்க கூடவே...இருந்துடு...உன்ன பாத்துக்கிற நான் இங்க இருக்கும் போது,இந்த குடும்பத்த விட்டுட்டு  நீ எதுக்கு தனியா அங்க... " என்னோடு உன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு என் குட்ம்பத்தொடு இங்கேயே தங்கி விடு என்கிற கனமான அர்த்தம் கொண்ட வார்த்தைகளை 5 நொடிகளில் சொல்லி விட்டான் ராம்."இத்தனை நாள் என் வாழ்க்கை முழுதும் நிறைந்திருந்த தனிமை,பாதுகாப்பற்ற சூழல் அத்தனையும் மறைந்து அன்பு நிறைந்த ஒரு அழகான குடும்பம் எனக்கு கிடைக்கபோகிறது.மனம் முழுக்க நேசத்தை மட்டும் ஏந்திக் கொண்டு என்னை ஏற்றுக் கொள் என்று என் முன் ஒருவன் நிற்கிறான்..." அந்த நொடிகள் கனமானவையாக பட்டது அவளுக்கு.கடவுள் கண் முன் வந்து விட்டார்.அவனுடைய வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும், தன் வாழ்க்கையை அவை எப்படி மாற்றிப் போகும் என்பதையும் முழுதும் உணர இயலாத ஒரு பரவச நிலையில் இருந்தாள்.விடுவென்று திரும்பி காரில் ஏறி அமர அவள் அமர...கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ஊற்றியது.ஒரு துளிக் கண்ணீர் வர வேணுமென்று பல இரவுகள் அவள் போராடியது உண்டு.கண்ணீரைத் தொட்டு பார்த்துக் கொண்டாள்.புல்லரித்தது.தன் பெண்மையை முதல் முறையாக ஆத்மார்த்தமாக உணர்ந்தாள்.அது என் குடும்பம்.காரைத் திருப்பும்படி சொன்னள்.வீட்டிற்கு வந்து ,கலங்கிய கண்களோடு அங்கேயே நின்று கொண்டிருந்த ராமின் தோள்களைக் கட்டிகொண்டாள்.
          முடிந்தது மே மாதம்.ஜூன் மாதம் தொடக்கி விட்டது.பெங்களூரில் ஒரு பள்ளியின் வாசலில் மலரை கார்த்திக் தன் பைக்கில் இருந்து இறக்கி விட,"மறக்காம அத்தைக்கு pressure மாத்திரை வாங்கிட்டு  போங்க... டேபிள் ல உங்களுக்கு டிபன் பாக்ஸ் இருக்கு.மறக்காம எடுத்துகிட்டு போங்க..." ஞாபகப்படுத்தி விட்டு பள்ளியை நோக்கி மலர் விரைய,திருச்சியில்  ஸ்வாஷிக்கா,சிறிய அளவில் தன் கிராபிக்ஸ் கம்பனியை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தாள்.

-(முற்றும்) .... அவ்ளோதாங்க!

Tuesday, January 5, 2010

மே மாதம்(5)


...(5 )...         ராகுலிடம் தெளிவாய் பேசிவிட தன்னை தயார் படுத்திக்கொண்டாள் மலர்.தனக்குள் கசப்புணர்வுகள்  எல்லாம் மறையட்டும் என காத்திருந்தாள்.ஒரு வார இடைவேளையில் கார்த்திக் அவளுக்கு நெருங்கிய தோழனாகிப் போயிருந்தான்.பத்திரிகை செய்தியில் ஆரம்பித்து ஆழ் மனப்ரச்சனைகள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருந்தது அவர்கள் உறவு.வாழ்வில் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு அணுகுமுறை கொண்ட இருவரும் ஒரு உறவில் இணையும் போது முரண்பாடுகள் எழுவது சஹஜம் .அனால் ஒருவரின் அணுகுமுறையை இன்னொருவர் ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த உறவு இனிக்க ஆரம்பிக்கும்.அதுவே நிகழ்ந்தது மலருக்கும் கார்த்திக்கும் இடையில்.... ராகுல் மீதான காதலை சொல்லிய நாளில் ஆரம்பித்தே கார்த்திக் மலர் மீதான தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.மலருக்கு தான் ஏனோ,'அன்றைய காலையில்' தன்னுடைய பதில் வேறு மாதிரியாக இருந்திருந்தால் தன வாழ்க்கை இன்னும் இனிமையாய் போய் இருக்குமோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து மறைந்து கொண்டிருந்தது. கார்த்திக் அவள் மன எல்லை கதவுகளை உடைத்து வேகமாய் முன்னேரிக்கொண்டிருப்பதையும் அவள் அறியாமல் இல்லை.

          அன்றைய நாள் விடிந்த பொழுது எப்பொழுதும் போல் தான் இருந்தது.மாலையில் ராகுல் மலரை சந்திக்க வரும் வரையில்...மலரை பார்க்க வந்த அவன் ஒரு மணி நேரம் ஆகியும் எதுவும் பேசவில்லை.முகம் இருகி இருந்தது.தன் முகத்தைக் காட்டாமல் திரும்பி அமர்ந்து இருந்தான்.மலரை இங்கு சந்தித்த நாள் முதல் அவளாய் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.மற்றுமொரு ஐந்து நிமிடம் கழிந்த பிறகு தன் நம்பிக்கையைத் திரட்டிக் கொண்டாள்.இருந்தும் பேச தைரியம் வரவில்லை.ஒரு நிமிடம் கண்களை மூடி கார்த்திக்கை நினைத்துக் கொண்டாள்.அவன் இருந்தால் எப்படி இதை எதிர் கொண்டிருப்பான்.. யோசித்தாள்.உள்ளிருந்து ஏதோ ஒரு உணர்வு உந்தித் தள்ள ராகுல் அருகில் சென்றாள்.மெல்லிய குரலில் "என்ன ஆச்சு...ஏன் இப்படி...." அவள் முடிப்பதற்குள் திரும்பிய அவன் கண்கள் சிவந்து போய் இருந்தன.அதை  பார்த்த மாத்திரத்தில் இவள் வார்த்தைகளற்று போனாள்.சற்றென்று இவள் கைகளை பற்றிக் கொண்ட அவன்,அவளது உள்ளங்கையில் முகத்தை புதைத்துக் கொண்டான்."என்னை வேணாம்னு சொல்லிட்டா மலர்..அவ முன்னாடி நாம வாழ்ந்து காட்டனும்...".அவன் தலையை மென்மையாய்க்  கோதினாள்.தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டு விலகினாள்.அவள் மனம் எண்ணங்கள் ஏதுமின்றி வெறுமையாய் இருந்தது.

           மறு நாள் நடந்தவற்றை சொல்ல கார்த்திக் மௌனமாய் அமர்ந்து இருந்தான்."அவன் கிட்ட என் காதலை சொல்ல நேரம் பார்த்துகிட்டு இருந்தேன்.இப்போ நடக்கிறதா இருந்தா அவன் கல்யாணம் நின்னு போச்சு.எனக்கு சாதகமா தான் இது எல்லாம் நடக்கிற மாதிரி தெரிஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு பாரு கார்த்திக்....கொஞ்ச மாசத்துக்கு முன்ன எங்களுக்குள்ள இருந்த காதலையோ இல்ல அவன் என்ன விட்டுட்டு போன பிறகு நான் பட்ட கஷ்டத்தையோ ஒரு வார்த்தைல கூட அவன் இது வரைக்கும் அங்கீகரிச்சது இல்ல... இப்போ வரைக்கும் நான் என்ன நினைக்கிறேன்னு ஒரு வார்த்தை கூட கேட்டது இல்லை...ஆனா எப்டி அந்த 'நாம' ங்கற வார்த்தை முளைச்சதுன்னு எனக்கு புரியல..... அவன் மேல இருந்த பிடிப்பு மொத்தமா விட்டுப் போன மாதிரி இருக்கு.இவன் கூட வாழனும்கிற ஆசை எல்லாம் போய் ரொம்ப நாள் ஆகுது.இருந்தாலும் ஏதோ ஒன்னு உறுத்திக் கிட்டே இருக்கு...." மெதுவாய் தெளிவாய் அவள் சொல்லி முடித்தாள். "சரி தான் மலர்.. விருப்போ வெறுப்போ அவர் மூஞ்சிக்கு நேர அத பத்தி நாலு வார்த்த பேசிட்டு வாங்க...அப்போ தான் அந்த உறுத்தல் குறையும்....." சிம்பிளாக ஒரு வரியில் முடித்து விட்டான் அவன்.பின் எழுந்து கிளம்புகையில் போகிற போக்கில் சொல்லி  விட்டு போனான்..."அவரு ரொம்ப unlucky ங்க..."


          இது இப்படி இருக்க,அங்கே ஸ்வாஷிக்காவோ ராமின் குடும்பத்தோடு இரண்டறக் கலந்திருந்தாள்.காதல் போன்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு இருவருமே எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள்.தனிப்பட்ட வாழ்வில் ஒரு முழு வட்டத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டவர்கள்.அதனால் தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பது புரிந்திருந்தாலும்,இவை அனைத்திற்கும் ஆயுள்  3 வாரங்கள் என்பதையும்,அதற்கு பின் உள்ள தங்கள் வாழ்க்கை முற்றிலும் வேறானது என்பதையும் அறிந்திருந்தார்கள்.எனவே நாளை குறித்து அவர்கள் பெரிதும் கவலை கொள்ளவில்லை....



-தொடரும் (pls pls bear... will be concluded in the next part :) )

Monday, January 4, 2010

மே மாதம்(4 )

...(4 ) மலர் முகத்தில் காட்டிய இறுக்கமோ  அல்லது வார்த்தையில் காட்டிய சுருக்கமோ கார்த்திக்கை சிறிதும் பாதிக்கவில்லை...ரொம்பவே இயல்பாய் .."ஓ...டீச்சரம்மாவா... சரி சரி..." என்று  புன்னகைத்தவன் வந்து அமர்ந்து கொண்டது வீட்டின் வரவேற்பறையின் சோபாவில்....சட்டென்று எதையும் பேசி பழக்கம் இல்லாத மலருக்கு இவன் கொடுப்பது இம்சையாக பட்டது.எப்போது போவானோ என்று அவள் யோசிக்கையிலேயே அடுத்த குண்டை அவன் வீசினான்."ஊர்ல அம்மா எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க...உங்களை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு...உங்களுக்கும் ஓகே னா அம்மாவ கூட்டிட்டு நான் திருச்சி வரேன்" .அவன் ஒரு முழு பைத்தியம் என்றே அவளுக்கு பட்டது.அவன் கேட்டது அபத்தத்திலும் அபத்தம் என்று தோன்றியது."ஹலோ..என்னங்க விட்டா பேசிகிட்டே போவீங்க போல..முதல் முறையா பாக்குற ஒரு பொண்ணுகிட்ட  இப்டிதான் பேசுவீங்களா?ஸ்வாஷிக்காவோட பிரென்டுன்னு பாத்தா... உங்க லிமிட் தாண்டி  நடந்துகிறீங்க....இந்த ஊர்ல நீங்க பாக்குற பொண்ணுங்க மாதிரி இல்ல நான்...இந்த இடத்த விட்டு முதல்ல போங்க...".சட்டென்று எழுந்து செல்வான் என்று நினைத்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது."என்னங்க..ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது.கூல் கூல்...எனக்கு பிடிச்சுருக்கு.உங்களுக்கு புடிச்சிருக்கான்னு தான கேட்டேன்.தப்பா ஒன்னும் behave பண்ணலையே..." என்று ஒரு நிமிடம் நிறுத்தினான்.சற்றே பயம் வந்து விட்டது மலருக்கு.இப்பொழுது அவனும் சற்று உணர்ச்சி வசப்பட்டவன் போல் தோன்றினான்."மென்மையான உணர்வுகளுக்கு இந்த ஊர்ல இடம் இல்லங்க..மண் வாசத்தோட  இருக்ற உங்கள பாத்த உடனே என்னோட அம்மா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க...ரொம்ப மனசுக்கு நெருக்கமா பட்டீங்க...அதனால கேட்டுட்டேன்...சரி விடுங்க...நடந்த எதையும் தப்பா எடுத்துக்காதீங்க... sorry" என்றவன் விடு விடுவென நடந்து வாசலுக்கு வந்தான்.செல்வதற்கு முன் திரும்பி "உங்கள பாத்தா ஏதோ ரொம்ப confusion ல இருகறாப்ல இருக்கு...take life easy.." என்று சொல்லி விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டான்.என்ன நடந்தது என்று யோசிப்பதற்கே மலருக்கு அரை நாள் தேவை பட்டது.வாழ்க்கையை எத்தை சுலபமாக வாழ்கிறான்.அவன் சொல்ற மாதிரி நான் தான் எல்லாத்தையும் complicate பண்ணிக்கிறேன்.life is easy...ஒரு நிமிடம் மனம் லேசாய் மிதப்பது போல் உணர்ந்தாள்.ஒரு 15 நிமிடத்தில் என்ன மேஜிக் செய்து விட்டான். மனசுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.காலாற வெளியில் நடக்கலாம் என வந்தவளின் கண்ணில் முதலில் தெரிந்தது தெரு முனையில் நின்று கொண்டிருந்த பைக்.வேறு ஒரு பெண்ணோடு அதில் சாய்ந்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தது ராகுல்.கண்கள் அகல விரிய அவனை அணுகினாள்.இவளை பார்த்து விட்ட அவன்,போலியாய் புன்னகைத்து ,"மலர்....நீ..நீங்க .. எப்டி இங்க...its a surprise" தோள்களை ஆட்டிக் கொண்டான்."meet my fiancee..." என்று பக்கத்தில் நின்ற பெண்ணை அறிமுகம் செய்தவன்..."நெக்ஸ்ட் ஜனவரில கல்யாணம்.." என்று முடித்தான்.பின் அந்த பெண்ணிடம் மலரை பழய தோழி என அறிமுகம் செய்தான்."எங்க தங்கி இருக்க மலர்...?" :இங்க தான்..என்று மலர் தன் வீட்டை சுட்டிக் காட்டினாள்.அதற்கு மேல் தனக்கு அங்கு ஒன்றும்   வேலை இல்லை என்று உணர்ந்தவள் வெறுமையாய் வீடு நோக்கி நடந்தாள்.
காலிங் பெல் ஓசை கேட்டது.வந்திருந்தது ராகுல்."உன்ன பாத்த உடனே சொல்லணும் நு நெனச்சேன் மலர்..இந்த ஒயிட்  சுடில ரொம்ப அழகா இருக்க."..சுருக்கென்றது மலருக்கு.அவனுக்கான காதல்,கண்ணீர்.... எத்தனை ஆழமானதாய் இருந்தது ..."அப்போ கொஞ்சம் வேலை ல பிஸி... உன்ன மிஸ் பண்ணிட்டேன்...அதுக்குள்ள ப்ரீத்திய பாத்து... பழகி.. engagement வரைக்கும் போய்டுச்சு...இப்பவும் கூட சொல்றேன் நீ எனக்கு special தான்..." இன்னும் ஏதேதோ பேசினான்.எத்தனை சுலபமாய் அவனால் பேச முடிகிறது.நீ எப்படி வேண்டுமானாலும் போ.. என் வாழ்க்கையில் இனிமேல் வராதே...இந்த வார்த்தைகளை அவனிடம் சொல்ல வேண்டும்.தொண்டையை காதல் அடைத்துக் கொண்டது.சொல்ல முடியவில்லை.அவனோ பேச்சின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தான்."தனியா இருக்க..safe ஆ இருந்துக்கோ...சிட்டி ரொம்ப மோசம்.என்ன ஹெல்ப் நாலும் எனக்கு கால் பண்ணு..." வரட்டுமா...?..தலை அசைத்தாள்.தலை சுற்றியது.சோபாவில் சாய்ந்து கொண்டாள்.பழய ஞாபகங்கள் நெருடின.எதிரே இருந்த டீபாயில் சின்னதாய் அழகாய் ஒரு புத்தகம்.தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட புத்தகம்.முதலில் அவள் மனதில் பதிந்த பெயர்...கார்த்திக்.எண்களைத் தடடினாள்.மறுமுனையில் அவன்."சொல்லுங்க மலர்" என்றான்."sorry... காலைல ஏதேதோ பேசிட்டேன்.ஈவிநின்க் உங்கள பாக்க முடியுமா..." "ஒ எஸ்..ஏழு மணிக்கு நானே வர்றேன் மலர்"...சொன்ன படியே வந்தான்.இப்பொழுது அவன் புன்னகையில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிநேகம் தெரிந்தது...ரொம்பவே எச்சரிக்கையாய் பேசினாள் மலர்."கல்யாணம் பத்தி எல்லாம் இன்னும் நான்  யோசிக்கல கார்த்திக்.நீங்க எனக்கு நல்ல பிரெண்டா இருப்பீங்கன்னு தோனுச்சு.." அவன் பதிலுக்காக நிறுத்தினாள்.புரிந்து கொண்டவனாய் "ஒ...நட்புக்கரம் மட்டும் தான் நீட்ட முடியும் நு சொல்றீங்க.ஓகே..லெட்ஸ் பி குட் பிரென்ஸ்...."
பாதி பாரம் குறைந்தது போல் இருந்தது அவளுக்கு....தன் வாழ்க்கையில் நடந்தவை  மொத்தத்தையும் சொல்லி முடித்தாள்.இப்ப நான் என்ன செஞ்சா கரெக்ட்...குழந்தையை போல் கேட்டாள்.வலியில்லாமல் ராகுலை  பிரியும்  வழியை சொல்வான் என்று நினைத்தாள் மலர்.கார்த்திக் தொடர்ந்தான்.."மலர்.. அடிப்படைல நீங்க ரொம்ப கன்சர்வடிவ்..எதையும் யோசிச்சு செய்ற ஆளு..ஆனா எந்த அடிப்படைல எனக்கு கால் பண்ணீங்க..உங்க கதை முழுசையும் சொன்னீங்க..சரியா சொல்லனும்னா நீங்க எடுத்த இந்த முடிவு  தப்பா கூட போய் முடியலாம்..நீங்க அது பத்தி யோசிக்கல..உணர்சிவசத்துல எனக்கு கால் பண்ணிடீங்க..ஆனா பயபடாதீங்க..நான் அந்த அளவுக்கு வில்லன் இல்ல..இத ஏன் சொல்ல வரேன்னா உணர்ச்சிவசப்பட்டு நீங்க எடுக்ற முடிவுகள் தப்பா போகலாம்.இப்ப கூட பாருங்க...அவர   நீங்க எவ்ளவோ திட்னீங்க..இருந்தாலும் வெளில போ நு அவர பாத்து உங்களால சொல்ல முடியல.ஏன்னா இன்னமும் நீங்க அவரை விரும்புறீங்க..பிள்ளை எப்படி இருந்தாலும் நேசிக்கிற தாய் மாதிரி தூய்மையான நேசம் உங்களோடது.இல்லன்னு சொல்லி நீங்களே உங்கள ஏமாத்துக்காதீங்க....நான் சொன்னதநல்லா யோசிச்சு பாருங்க.சரின்னு தோணுச்சுனா அவர நேர்ல பாத்து உங்க காதல மறுபடியும் சொல்லுங்க...உங்களுக்கும் அவருக்கும் இடைல இருக்கிறது என்ன மாதிரியான relationship னு அவரையே சொல்ல வைங்க.தெளிவான ஒரு பதில அவரு கொடுத்தே ஆகணும்கிற கட்டாயத்த உண்டு பண்ணுங்க.அவரு போலியா இருக்காரு அது இதுன்னு கண்டதையும் யோசிக்காதீங்க..உண்மையான அன்பு எல்லாத்தையும் வாழ வைக்கும்...உங்க அளவுல நீங்க உண்மையா இருங்க".கடிகாரம் நேரம் பத்து என அறிவித்தது".நான் கிளம்பட்டுமா...?".. "ம்ம்ம்...சரி..."
ஏன்னா இன்னமும் நீங்க அவரை விரும்புறீங்க..பிள்ளை எப்படி இருந்தாலும் நேசிக்கிற தாய் மாதிரி தூய்மையான நேசம் உங்களோடது. ஆம்.என்ன என்று தெரியாமல் தொண்டையை அடைத்துக்  கொண்டிருந்தது இது தான்.நன்றி கார்த்திக்.... ஆனால் ராகுலிடம் நாளையே சொல்ல வேண்டும் என்று மலர் நினைக்கவில்லை.நேரம் கூடி வரும்போது சொல்லலாம்."இயல்பாகவே எனக்குள்ள தயக்கங்கள் மறைந்த பின்னே சொல்லலாம்.....இன்று இது நடந்தாக வேண்டும் என்ற திட்டமிட்ட வாழ்க்கை போதும்.எந்த நொடியில் அவனிடம் கேட்க தோன்றுகிறதோ  அந்த நொடியிலே கேட்கலாம்..." தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
-தொடரும்

Thursday, December 24, 2009

மே மாதம்(3 )

-3 -........ ராம் ஸ்வாஷிக்கவுடன் தங்குவது என முடிவு ஆனா பின் குழந்தைகள் விளையாடுவதற்கு கொஞ்சம் இடம் தேவை என முன்னே ஹாலில் இருந்த சின்ன மர பீரோவை நகற்ற ,ஸ்வாஷிக்கா முயற்சிக்க,ராம் "என்னங்க இதெல்லாம் நீங்க நகத்திக்குட்டு...உங்களால முடியுமா...நல்ல வெயிட்டுங்க .. தள்ளுங்க..."என்றான்.முதல் முறையாக உன்னால் முடியாது உனக்காக நான் செய்கிறேன் என்கிற வார்த்தைகளை கேட்கிறாள்.இது வரையில் அவளுக்கு தேவை படுகிற  ஒரு குண்டூசியை கூட அவளே தான் பெற்று கொள்ள வேண்டும்.இதை எல்லாம் பண்ணா உடம்புக்கு ஒத்துக்காது...பண்ணாதே என்று சொல்லவோ,அந்த நேரத்தில் தனியாய் வெளியே போவது நல்லது இல்லை.. போகாதே..என்று சொல்லவோ அவளுக்கு யாரும் இருந்தது இல்லை.இருந்தவர்களும் சொல்லியதில்லை.ஆனால் ராமிற்கு இயற்கையிலேயே தன்னை சார்ந்து இருப்பவர்களின் மீது அக்கறை கொள்கின்ற   குணம் இருந்தது.இரவு 8   மணிக்கு,அடுத்த நாள் தேவை படுகின்ற ஒரு சோப்போ அல்லது ஷாம்பூவோ வாங்குவதற்கு கடைக்கு செல்கிறேன் என்றால்,"இந்த நேரத்திலே நீங்க போகனுமா..வேண்டாம்.அவசரம்னா குடுங்க நான் வாங்கிட்டு வரேன்" என்பான்.அவனோடு இருந்த அந்த இரண்டு நாட்கள் தன்னை ஒரு இளவரசி போலே நினைக்க வைத்தான் அவன்.இரண்டாம் நாள் இரவு இதைப் பற்றியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.someone who makes you to feel special,becomes special in your life.இந்த வாக்கியத்திற்கு அவன் மட்டுமே அர்த்தமாக பட்டான் அவளுக்கு.இப்படி நம் மீது அக்கறைப்பட ஒருவர் இருந்தால் தான் சம்பாதிக்கும் பணத்திற்கும் சரி,கிடைக்கின்ற வெற்றிக்கும் சரி ஒரு அர்த்தம் இருக்கும்.ஏன்,வாழுகின்ற வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு.எங்கு வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்கிறது.ராமின் குடும்பத்தை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே அவள் உறங்கிப் போனாள்.ராமின் மீது ஒரு வித அன்போ,நேசமோ ஏற்பட ஸ்வாஷிக்காவால்  காரணம் சொல்ல முடியும்.எப்போதுமே பெண்கள் அப்படித்தான்.எதையும் எடை போடுகின்ற,ஆராய்ந்து பார்க்க கூடிய மனநிலை அவர்களுக்கு உண்டு.calculative என்று கூட சொல்லலாம்.காதலே ஆனாலும் அப்படித்தான்.பொதுவாக ஆண்களுக்குள்ள மனநிலை போலவே ராமிற்கும்.... ஸ்வாஷிக்காவை அவனுக்கு ரொம்பவே பிடித்து போயிற்று.ஏன் என்று எல்லாம் அவனுக்கு தெரியவில்லை.ஏன் என யோசிக்கவும் இல்லை.அடுத்த நாள் காலை ஊருக்கு கிளம்புவதற்கு ஆயத்தாமாகிக் கொண்டிருந்தான் அவன்.உண்மையில்  ஸ்வாஷிக்காவை பிரிகிறோம் என்பதை விட அங்கு அவளைத் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.மலர் இங்கு இருந்த போதும் அப்படித்தான்.ஒரு நாளைக்கு 3 முறையாவது போன் செய்து விடுவான்."சரிங்க.. நாங்க கிளம்பறோம்.." என அவன் சொல்ல .. சற்றும் அவன் எதிர்பார்க்காத ஒன்றை ஸ்வாஷிக்கா அவனிடம் கேட்டாள்."எனக்கு உங்க அம்மா,அப்பா,குடும்பம் எல்லாரையும் பாக்கணும் னு தோணுது.. என்னையும் உங்களோட உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா..".அவன் திகைத்து போய் நின்றான்.அவள் இவ்வாறு கேட்டதில் அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி என்றாலும்,அங்கு அம்மா அப்பா.. என்று யோசிக்கையில் சற்று சிரமம் என்று தோன்றியது.தன் 3 வயது கடைசி மகன்  ஏற்கனவே அவளின் துப்பாட்டாவின் நுனியை பிடித்து கொண்டு தான் நின்றான்.சில நிமிடங்கள் யோசித்த அவன்..."சரி.. நீங்களும் வாங்க..நானே உங்களை கூப்பிட்டு இருக்கணும்.எனக்கு தோணாம போச்சு.நீங்களே கேட்டுட்டீங்க..எங்க அப்பா அம்மா கொஞ்சம் பழைய ரகம்.நீங்க என்னோட மேனேஜர் பொண்ணு.ஊற சுத்தி பாக்க வந்துருக்கீங்கனு தான் சொல்லணும்.மலர் பத்தி வேற கேப்பாங்க...சரி பாத்துக்கலாம்" என்றான்.மூவராய் அந்த கிராமத்திற்கு வந்த ராம் நால்வராய் திருச்சிக்கு பயணப்பட்டான்.
அங்கெ மலருக்கும் வாழ்வில் தென்றல் வீசிக் கொண்டிருந்தது.பெங்களூர் வந்த மூன்றாம் நாள் காலை,வாசலில் ஹாரன் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள் அங்கு பார்த்தது ஒருவனை.மாநிறம்,ஜீன்ஸ் பான்ட் போட்டு இருந்தான்.கருப்பு நிறத்தில் ஒரு டி ஷர்ட்.கண்களில் கருப்பு நிறக் கண்ணாடி என இவள் கண்களுக்கு நன்றாகத் தோன்றினான்.இவளை பார்த்து விட்டு கா முன்னேறி வந்தான்.வந்து நின்று "ஸ்வாஷிக்கா..." என்றான்.இவளோ.."she is not here.she is on a trip to tamil nadu"...என முடிந்த்த வரை குரலை தெளிவாக்கிக் கொண்டு கூறினாள்.அதற்குள் மேலிருந்து கீழ் வரை அவளை பார்த்து விட்டான் இவன்.வெள்ளை நிறத்தில் சுடிதார்.நேர் வகிடு எடுத்து முறையாய் பின்னி இடுப்பிற்கு கீழ் வரை தொங்க விடப் பட்டு இருந்த ஒற்றை பின்னல்,காதுகளில் தொங்கிய தங்கக் கம்மல்.புதிதாய் ,இன்றோ நேற்றோ ட்ரிம் செய்யப்பட்ட புருவம்.பாதங்களுக்கும் ,சுடிதார் பாண்ட்டின் கீழ் பட்டிக்கும் இடையே தெரிந்த கொலுசின் மூன்று முத்துக்கள்...."ஏங்க.. நீங்க தமிழ் நாடா..." என்றான் படு எதார்த்தமாய்.ஏற்கனவே அழகான அவளது கண்கள் இன்னும் விரிந்து ஆச்சர்யத்தில் "ஆமா...எப்டி கண்டு புடிச்சீங்க.." என்றாள்."அட போங்கங்க...இதுக்கெல்லாம் ஜேம்ஸ் பாண்டா  வரணும் ..." என்று சொல்லி சிரித்தவன்."ஓ..ஸ்வாஷிக்காவோட be-new பிரெண்ட் நீங்க தானா.ஹவுஸ் ஸ்வாப் பண்ணிட்டீங்களா...சரி சரி.. நான் அவ கூட வொர்க் பண்றேன்..பேரு கார்த்திக்...நானும் தமிழ் நாடு தான்.ஊரு சென்னை.அவளோட பெஸ்ட் பிரெண்ட்.ஆமா நீங்க?." என சாரா சரவென சொல்லி முடித்தான்.அவனுடைய  வேகத்தில் திணறிப் போன இவள்,தனக்கே உரிய நிதானத்தோடு சொன்னாள்... "மலர்..ஸ்கூல் டீச்சர் ,ஊரு திருச்சி " என சுருக்கமாய் முடித்தாள்.
-தொடரும்

Wednesday, December 23, 2009

மே மாதம்(2 )


-2 -.............. பெங்களுருவின் மேல் மலருக்கு ஈர்ப்பு ஏற்பட ஒரு காரணமிருந்தது.ஆனால் ஸ்வாஷிகா ஏன் காக.முக.பட்டிக்கு வர வேண்டும்.அதற்கும் கரணம் இல்லாமல் இல்லை.சிறு வயதிலேயே பிரிந்து விட்ட தாய் தந்தையர்,பாட்டியோடு டெல்ஹியில் கழித்த டீன் ஏஜ் பருவம்..அரவணைப்பு,கண்டிப்பு, ஏதும் இல்லாத வாழ்க்கை.சாதனைகளும்,மைல் கற்களும் அவள் வாழ்க்கையில் இருந்தன. அன்பும்,நேசமும்,கவனமும் கொள்வதற்கு யாரும் இல்லை. அவளே தேடிக் கொண்ட வாழ்க்கையும் அவளுக்கு ஏமாற்றத்தைத் தர விரக்தியின் விளிம்பில் இருந்தாள்.தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்கள் அவள் மனதை வெறுமையாக்கி வைத்து இருந்தன.மனம் நொந்து அழுதால் கூட ஒரு துளி கண்ணீர் கண்ணில் இருந்து வெளி வராத வண்ணம் மனம்  இறுகி இருந்தது.படிப்பறிவில்லாத ஒரு கிராமத்து பெண்ணாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குட அவளுக்கு சில சமயங்களில் தோன்றும் ஒரு அமைதியான வாழ்க்கை,குறைந்த பட்சம் ஒரு சில நாட்களுக்காவது அவளுக்கு தேவை பட்டது.அதனாலேயே காக.முக.பட்டிக்கு பயணம்.

        மே 3 அன்று காலை காக.முக.பட்டியில் ஸ்வாஷிகாவும்,பெங்களுருவில் மலரும் வந்திறங்கினர். முதல் நாள் தாங்கள் விரும்பிய இடத்தில் ருவருக்கும்  இனிமையாய் கழிந்தது.தங்கள் காயங்களை மறுப்பதற்கான சூழல் ஆறுதல் தந்தது.அடுத்த நாள் காலை 8 மணிக்கெல்லாம் ஸ்வாஷிக்காவின் வீட்டு கதவு தட்டப்பட்டது. நல்ல உறக்கத்தில் இருந்த அவள் எழுந்திரிக்கவில்லை.வெளியில் தன் இரு குழந்தைகளுடன் வெகு நேரம் கதவைத் தட்டி களைத்து போன மலரின் அண்ணன் ,மலருக்கு இவ்வளவு நேரம் தூங்கும் பழக்கம் இல்லையே  என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே பக்கத்து வீட்டு பாட்டி வனைப் பார்த்து விட்டு சொன்னாள்.....  'என்னப்பா உன் தங்கச்சிய பாக்க ஒரு நாள் கூட வந்தது இல்ல...பொண்டாட்டி வந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளே அவல பாக்க புள்ளைங்களோட வந்துட்டியா..இவ்வளவு பாசம் வைச்சுருகிறவன் ஏன் சண்ட போடணும்"என்று சொல்லி சிரித்தாள்.பொண்டாட்டியா?என்று குழம்பியவன்..." இல்லம்மா.. அது வந்து ..." என்று அடுத்து ஆரம்பிப்பதற்குள் .. அவளே தொடர்ந்தாள்.. மலர் ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லாம் சொல்லிட்டு தான் பா போனா..." என்று மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவள் நகர்ந்து விட... மலர் ஊருக்கு போய் இருக்கிறாளா ? என் குழப்பத்துடன் இவன் திரும்ப... நீல நிற நைட்டியும் கலைந்த கூந்தலுமாக இவன் முன் நின்றது  ஸ்வாஷிகா.சிலநொடிகள் தன்னை மறந்து அவளை பார்த்து விட்டு பின் சுய நினைவு வந்தவனாய் சற்றே பதறிய அவன் "அ.. அது வந்து... சாரிங்க.. இங்க என் தங்கச்சி..." என்று மென்று விழுங்க கணப் பொழுதில் நிலையை உணர்ந்து கொண்ட அவளோ நீங்க மலரின் ...? என்று இழுக்க  .."அண்ணன்" என இவன் முடித்தான்."உள்ள வாங்க.." என்று அவனை அழைத்து அமரச் செய்தாள்.மலர் ஏற்கனவே தன் குடும்பத்தை பற்றி ஸ்வாஷிக்கவிடம் சொல்லி இருக்கிறாள் எனினும் இந்த அண்ணனை பற்றி சொல்லியதில்லை.யோசித்துக் கொண்டே அவள்.."மலர் அவளோட higher studies விஷயமா பெங்களூர் போய் இருக்கா. நான் அவளோட பிரெண்ட் .லீவுக்காக இங்க வந்து இருக்கிறேன்.நான் வந்த நேரம் அவ போகும் படியா ஆய்டுச்சு.உங்க வீட்ல ரொம்ப strict நாள உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போய் இருக்கா. இன்னும் 2 அல்லது 3 நாள்ல வந்துருவா.எனக்காக  அவள மன்னிக்கணும்." என்று சொல்லி புன்னகைத்தாள்.அவள் பேசிய விஷயத்தை விடவும் பேசுகின்ற விதத்தையே மிகவும் க்வநித்ததாலும்,தான் பேச வேண்டிய முறை என்பதை சற்றே தாமதமாக உணர்ந்ததாலும் ,லேசாய் தடுமாறி பின் சொன்னான்."ம்ம்.. அப்டியா.. சரிங்க.. நா அவ கிட்ட போன் ல பேசிக்கிறேன்...நான் வரேன்" என்று கிளம்ப..."குழந்தைகளோட வந்து இருக்கீங்க..என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.." என்றால் அவள்."இவங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டாச்சு.அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.ரெண்டு நாள் இருந்துட்டு மலரையும் கூட்டிட்டு போலாம்னு ..." என்றான்.இதற்குள் அவள் மூவருக்கும் பால் போவ்டேரில் ஆற்றிய காபியை கொடுத்திருந்தாள். மெதுவாய் காபியை உறிஞ்சியபடி அவள்.."உங்க  wife  வரலையா ' என்றாள்.ஒரு சில வினாடிகள் இடைவெளிக்கு பின் அவன் தெளிவாய் சொன்னான்."இல்லங்க..நான் ஒரு  divorcee"..."ஓ...சாரி..." என்றவள் குடித்த கப்பை கீழே நிதானமாய் வைத்து விட்டு " நானும் கூட...  " என்றாள்.இந்த ஒற்றுமை இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை,நட்பிற்கான விதையை தூவியது.முறிந்து போன தம் திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டனர் இருவரும்.தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அவன் கூறியதில் இருந்த நேர்மை ஸ்வாஷிக்காவை கவர்ந்தது.இது வரை அவள் வாழ்க்கையில் கடந்து போன ஆண்கள் ,அவள் தந்தை மற்றும் கணவன் உட்பட யாரும்,ஆண்கள் குறித்து ஒரு நல்ல எண்ணம் இவள் மனதில் வரும் வண்ணம் நடந்து கொண்டது இல்லை .இருந்தும் இவனை பார்த்த கணம் முதல் இப்பொழுது வரை இவன் கண்களில் தெரிந்த நேர்மை இவன் மீது ஒரு ஈர்ப்பை உண்டாகியது என்றால்..   ஸ்வாஷிகாவின் அன்பிற்கான தேடல் நிறைந்த வாழ்க்கை இவனை ,அவளை நேசிக்கும்படி செய்தது."சரிங்க... தெரியாம வந்து உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கணும்.இருந்தாலும் உங்களை சந்திச்சது ரொம்ப மகிழ்ச்சி.காபிக்கு தேங்க்ஸ்..நாங்க கிளம்பறோம்" என்றான்.சற்றும் யோசிக்காமால் ஸ்வாஷிக்கா சொன்னாள்."என்ன கிளம்பிடீங்க...ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு தான வந்தீங்க.இருந்துட்டு போலாமே.." எந்த உள்நோக்கமும் இன்றியே அவள் அப்படி சொன்னாள்.அவள் வளர்ந்த விதம், அப்படி அவனை அங்கு தங்க சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக அவளுக்கு சொல்லவில்லை.ஆனால்,அவன் அப்படி இல்லை.கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்தவன்.நமது வழக்கப்படி எது தவறு எது சரி  என அறிந்தவன்.மேலும் ஒரு காரியம் செய்யும்  போது அதன் பின்விளைவுகளை யோசித்து பின் செய்பவன்.இருந்தாலும்,ஸ்வாஷிக்கா கேட்டவுடன் முதல் முறையாக,நாளையை பற்றிய யோசனை இன்றி "உங்கள் விருப்பம்" என்றான்."ரொம்ப சந்தோசம்..." என்று புன்னகைத்தவள்..ஆமா உங்க பேர சொல்லவே இல்லையே என்றாள்..."ராம்.. உங்க பேரு?"... "ஸ்வாஷிகா"...

-தொடரும்